VIDEOS
“மை லட்டு”… பிறந்தநாள் வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்ட நடிகை சினேகா.. யாருக்கு தெரியுமா..??

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா. இவரை புன்னகை அரசி என்ற பெயரைக் கொண்டு தான் பலரும் அழைப்பார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தற்போது மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சினேகா அடிக்கடி குடும்பத்துடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது மகன் விஹானுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி புகைப்படங்கள் தொகுப்புடன் கூடிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மயில் லட்டு உன்னை நான் எந்த அளவிற்கு நேசிக்கிறேன் என வார்த்தைகளில் அடக்க முடியாது என்று கூறி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க