LATEST NEWS
சுதந்திர தினத்தன்று பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடிய 90s நடிகை சுஹாசினி… வைரலாகும் அழகிய புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் ஷாருஹாசனின் மகள் சுஹாசினி.
இவர் நடிப்பில் வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு மற்றும் பாலைவனச்சோலை உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தன.
அந்த திரைப்படங்கள் இவரின் வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. திரைத்துறையில் நடிப்பில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர்.
அதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வருகிறார்.
80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார்.
இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொண்டார்.
அவருடன் இணைந்து இந்திரா என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் தற்போது சுகாசினி ஒரு சில நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார்.
அதனைப் போலவே மணிரத்தினம் தொடர்ந்து மிக பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கி வருகின்றார்.
இவரை இயக்கத்தில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சுகாசினி அடிக்கடி நண்பர்களுடன் வெளியில் செல்வது மற்றும் குடும்ப புகைப்படங்கள் என தொடர்ந்து பல புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அதன்படி நேற்று சுகாசினி தனது பிறந்த நாளை பிரபலங்களுடன் கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.