LATEST NEWS
விஜய் அஜித்தின், பிரதான ஹீரோயின் “சுவலட்சுமியின் தற்போது நிலை என்ன”… தெரியுமா…? வைரலாகும் புகைப்படம்..!

1990,களில் அதிகப்படியான ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்த நடிகை சுவலட்சுமி இவர் பார்ப்பதற்கு பக்கத்து விட்டு பெண் போல தோற்றம் உடையவர். மற்ற நடிகை போலை அலட்டி கொள்ளாமல் சாதாரணமாக இருப்பர். இதனால் நடிகை சுவலட்சுமிக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இறந்தது. மேலும் இவர் தனது திறமையை மட்டுமே நம்பி நடித்து வந்தார்.
1995 ஆம் ஆண்டு, இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில், வசந்த் இயக்கத்தில் அஜித் நடித்த ஆசை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். சுவலட்சுமியின் முதல் படமே, இவருக்கு வெற்றிப்படமாக அமைந்து, மேலும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு பிறகு குடும்ப பாங்கான, கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து நடித்தார். அதன் பின்னர் விஜயுடன் ‘லவ் டுடே’, ‘ நிலாவே வா’ போன்ற படங்களில் நடித்தார். அப்படங்களும் சூப்பர் ஹிட்டானது. அதன் பின்னர் ரசிகர் பட்டாளம் அதிகரித்து 1995,களில் இருக்கும் இளைஞர்கள் திருமணத்திற்கு பெண் பார்க்க வேண்டும் என்றால் நடிகை சுவலட்சுமியை போல பெண் தான் இருக்க வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். அந்தளவுக்கு பிரபலமான நடிகை.
நடிகை சுவலட்சுமிக்கு ‘நதி கரையினிலே’ என்ற படத்திற்க்காக தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் என்ற விருது 2003 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து படவாய்ப்புகள் குறைந்ததால் சீரியல் பக்கம் சென்று விட்டார். அதில் சூலம் என்கிற சீரியலிலும் நடித்தார். பின்னர்,
ஸ்வாகாடோ பனர்ஜீ என்பவரை திருமணம் செய்துகொண்டு சான் பிரான்சிஸ்கோவில் செட்டிலாகி விட்டார். அதன் பின்னர் இவரை பற்றி எந்த ஒரு செய்யும் கிடைக்கவில்ல தற்போது, நீண்ட இடைவெளிக்குப் நடிகை சுவலக்ஷ்மி தன்னுடைய கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.