TRENDING
ஆசிரியை அடித்தால் 8ம் வகுப்பு’… “மாணவனுக்கு கண் பார்வை பறிபோன” பரிதாபம்….! சென்னையில் நடந்த கொடுமை…!

சென்னையை அடுத்த மேடவாக்கம் அரசு பள்ளியில், 8-ம் வகுப்பு படித்துவரும் மாணவனை ஆசிரியை அடித்ததால் தற்போது கண் பார்வை இழந்து பரிதவித்து வருகிறார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அடுத்த பள்ளிகரணையைச் சேர்ந்த தம்பதிகளான வேலு – ரேகா இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். மேலும் வேலு அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் வெட்டியான் வேலை செய்து வருகிறார் வேலுவின் மூத்த மகன் கார்த்திக் (14), இவன் மேடவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று, மாணவன் கார்த்திக் பள்ளியில் ஏதோ சிறு தவறு செய்துள்ளார், அதற்க்கு தண்டனையாக தமிழ் ஆசிரியை இரும்பு ஸ்கேலால், கார்த்திக்கின் பின் தலையில் அடித்துள்ளார். இதில், கார்த்திக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், சில மாதங்களில் கார்த்திக்கு பார்வை குறையை தொடங்கியது. இதனால், கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில், கார்த்திக்கின் மூளையில் ரத்தக்கசிவு மற்றும் அவரது கண் சற்று வெளியே வந்திருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
மேலும் மருத்துவர்களின் ஆலோசனை படி, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில், எதிர்பாராதவிதமாக, மாணவர் கார்த்திக்கின் இடது கண் பார்வை பறிபோனது. அதோடு, அவரது நரம்பு மண்டல பாதிப்பு, மூளையில் ரத்தக்கசிவு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாணவர் கார்த்திக் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், பார்வை பறிபோன மாணவனை பார்க்க பள்ளி சார்பில் இருந்து யாரும் வரவில்லை எனக் குற்றம்சாட்டிய பெற்றோர், இது தொடர்பாக புகார் அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் கண்மூடித்தனமாக தாக்கி, என் மகன் பார்வை பறிபோக காரணமான பெண் ஆசிரியையை கைது செய்ய வேண்டும் என மாணவன் கார்த்திக்கின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.