LATEST NEWS
“தினம் தினம் இதை பண்ணி டார்ச்சர் பண்ணுவாரு”.. நாங்க பிரிய இது தான் காரணம்… விவாகரத்து பற்றி பல வருடம் கழித்து மனம் திறந்த நடிகை ஊர்வசி..!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை ஊர்வசி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதே சமயம் நடிகராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞர், தொலைக்காட்சி தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்தவர்.
இன்றும் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேதங்களில் நடித்த அசத்தி வருகின்றார். எந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்தாலும் அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடும். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நடிகை ஊர்வசி சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய திருமண வாழ்க்கை முடிவு குறித்து பேசி உள்ளார். அப்போது, மனோஜ் ஜெயனை திருமணம் செய்து கொண்டேன்.
அவருடனான வாழ்க்கை சில வருடங்களில் முடிந்து விட்டது. அதற்கு முக்கிய காரணமே குடிப்பழக்கம் தான். அவரின் குடும்பத்தில் அனைவருமே ஒன்றாக குடிப்பார்கள். அவர்தான் எனக்கு ஊற்றி தருவார்.இதனால் தினமும் குடித்து குடித்து நான் குடிக்க அடிமையாகி விட்டேன். என்னை குடிக்க அடிமையாக்கியதே அவர்தான். அதுவே நாங்கள் பெரிய காரணமாக அமைந்துவிட்டது.
அந்த குடியை காரணம் காட்டி என் மகளையும் என்னிடம் இருந்து பிரித்து விட்டார். அதனால் தனிமையில் மன அழுத்தத்தில் இருந்த சமயத்தில் எங்களுடைய குடும்ப நண்பர் சிவப்பிரசாத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். இரண்டாவது திருமணம் செய்யும்போது எனக்கு 40 வயது. தற்போது எங்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று ஊர்வசி பேசியுள்ளார்.