CINEMA
விஜய்க்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை… எப்பவும் நான் அவருக்கு சப்போர்ட்…. நடிகை வனிதா பளீச்..!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் 1995 இல் வெளியான ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக விளங்குகின்றார். இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக அதிக அளவில் பேசப்பட்டவர். இவர் தொடர்பான எந்த செய்தி வெளிப்பட்டாலும் அந்த செய்தி உடனே வைரலாகி விடுகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இவர், நடிகர் விஜய்க்கு எப்பொழுதும் நான் கண்டிப்பாக சப்போர்ட் செய்வேன். இந்தி தெரியாது போடாவுக்கும் விஜய்க்கும் சம்மந்தம் இல்லை. ஆரம்ப கட்டத்தில் எங்களுடைய தொடக்கம் ஒன்றாக இருந்தது. எங்களுக்குள் அந்த பிணைப்பும், அன்பும் எப்போதும் இருக்கும் என்று பேசியுள்ளார்.