நடிகைகளுக்கு அந்த பழக்கமும் உண்டு அதனால நீங்க அப்படி..! பண்ணுவீங்களா அட்ஜெஸ்மெண்ட் கூறித்து நடிகை ஓபன்..? - cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகைகளுக்கு அந்த பழக்கமும் உண்டு அதனால நீங்க அப்படி..! பண்ணுவீங்களா அட்ஜெஸ்மெண்ட் கூறித்து நடிகை ஓபன்..?

Published

on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ரெஜினா. இவர் ‘கண்ட நாள் முதல்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘அழகிய அசுரா’ கன்னடத்தில் வெளியான ‘சூரியகாந்தி’ தெலுங்கில் வெளியான ‘சிவா மனசுல சுருதி’ உள்ளிட்டபல படங்களில்  நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற படத்தில் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று தனக்கான  ரசிகர் பட்டாளத்தையும் பெற்றுக் கொண்டார்.இதை தொடர்ந்து இவர் பட வாய்ப்புகள் ஓரளவுக்கு அமைந்த நிலையில் ராஜதந்திரம், மாநகரம் , ஜெமினி  கணேசனும் சுருளிராஜனும், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.

Advertisement

ஆனால் ராஜதந்திரம், மாநகரம் போன்ற  படங்கள் போதிய வரவேற்பு  கிடைக்கவில்லை. இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் கருங்காப்பியம் நடிகை ரெஜினா அண்மையில் ஒரு பேட்டி அளி த்திருந்தார். இந்த பேட்டியில் தனக்கு அட்ஜஸ்ட்மென்ட் அப்ரோச் வந்ததாக கூறியிருந்தார்.நடிகைகள் குடிக்கிறார்கள், போதையில் இருக்கிறார்கள், பார்ட்டி செய்து கூத்தடிக்கிறார்கள் என்று கூறுவார்கள். ஆம் அது உண்மைதான்.

அதனால் அப்படி இல்லை நடிகைகள் அப்படி இருப்பதால் அவர்கள் அனைத்துக்குமே சம்மதம் தெரிவிப்பார்கள் என்று நீங்கள் நினைப்பது ரொம்பவே தவறு. அவருடைய வாழ்க்கையை அவர் கொண்டாடுகிறார். அந்த கொண்டாட்டத்தை அடிப்படையாக வைத்து அவரின் நடத்தையை நீங்கள் எப்படி கேள்விக்குறி ஆக்கலாம். அது தப்பு இல்லையா? படுக்கையை பகிர்வாரா? நடிகை ஒருவர் குடிக்கிறார் என்ற காரணத்திற்காகவே அவர் உங்களுடன் படுக்கையை பகிர்ந்துகொள்வார் என்று நினைப்பதெல்லாம் அபத்தத்தின் உச்சம்.

Advertisement

அவர் தன் ஆண் நண்பருடன் படுக்கையை பகிர்கிறார் உங்களுடன் பகிரவில்லை என்றால் உங்களை அவருக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தம். உங்களை பிடிப்பதும் பிடிக்காமல் போவதும் ஒருவரின் தனிப்பட்ட உரிமை. மற்றவர்களுடன் அவர் அப்படி இருக்கிறார். என்னிடமும் அவர் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுவதற்கு நீங்கள் யார்?.. உங்களை பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை அவ்வளவுதான். அந்த நடிகையின் கேரக்டரை அடிப்படையாக வைத்து நீங்கள் அத்துமீறலாம் என்று நினைப்பது தவறான விஷயம்தான் என்றார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in