LATEST NEWS
கோலிவுட்டில் நுழைந்த ஒரே வருடத்தில் டாப் ஹீரோவுக்கு ஜோடியாகும் அதிதி சங்கர்.. செம குஷியில் ரசிகர்கள்.. அவர் யார் தெரியுமா..??

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் சங்கர். இவரின் இளைய மகளான அதிதி சங்கர் கடந்த வருடம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார். டாக்டர் படிப்பை முடித்துள்ள இவர் நடிப்பு மேல் அதிக ஆர்வம் கொண்ட காரணத்தால் சினிமாவில் நுழைந்தார். அதன்படி கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமான அதிதி சங்கர் தனது முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் ஹீரோவாக அறிமுகமாகும் புதிய படத்தில் அதிதி சங்கர் அவருக்கு ஜோடியாக நடிக்கின்றார். அந்தத் திரைப்படத்தை அஜித்தின் பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய விஷ்ணுவர் இயக்குகின்றார். அது மட்டுமல்லாமல் இயக்குனர் ராம்குமார் இயக்கம் புதிய திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி நடிக்க உள்ளார். இப்படி அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் அடுத்ததாக ஒரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதாவது சூர்யாவின் 43வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ள நிலையில் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு அதிதி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. கோலிவுட்டில் அறிமுகமான ஒரே வருடத்தில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை அதிதி சங்கர் தட்டி தூக்கி வருவதால் டாப் ஹீரோயின் இடத்தை விரைவில் பிடித்து விடுவார் என்று கூறப்படுகிறது.