LATEST NEWS
சூர்யாவின் பெயரை சொன்னதால்….. அதிதிக்கு வந்த ஆப்பு….. விலகிய பிரபல நடிகர்கள்….. அடக்கொடுமையே…..!!!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை எடுப்பதில் புகழ்பெற்றவர் இயக்குனர் சங்கர். அவரின் இளைய மகள் அதிதி சங்கர் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு நடிப்பில் அதிக ஆர்வம் இருந்த காரணத்தினால் விருமன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். கதாநாயகியாக அறிமுகமான இவர் முதல் திரைப்படத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், இவரின் நடிப்பு பாராட்டும் வகையில் இருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் உடன் இணைந்து மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். முதல் படத்தில் இவ்வளவு பிரபலமானாலும் ஒரு பக்கம் சர்ச்சையும் ஏற்பட்டது. அதாவது அந்த திரைப்படத்தில் மதுரவீரன் என்ற பாடலை இவர் பாடியிருந்தார். ஆனால் இவர் பாடுவதற்கு முன்பு ராஜலட்சுமி தான் அந்த பாடலை பாடியுள்ளார்.
ஆனால் ஷங்கரின் மகள் என்பதால் இவரை பாட வைத்து அந்த பாடலை வெளியிட்டனர். இதை பார்த்த பலரும் சற்று கோபமடைந்தனர். அதிதி சங்கர் சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்க அதற்கு சூர்யா தான் என்று கூறியுள்ளார். ஆனால் இதுதான் தற்போது பெரிய சிக்கலாக அமைந்துள்ளது. தமிழின் மாஸ் மற்றும் டாப் நடிகர்கள் அதிதி மேல் செம கடுப்பில் இருக்கிறார்கள். தங்களது திரைப்படங்களில் அதிதி சங்கருக்கு வாய்ப்பளிக்க மறுப்பதாக சில தகவல் வெளியாகி வருகின்றது.