LATEST NEWS
துணிவு படத்தின் அப்டேட்டை இப்படியா கேட்குறது…! அதில் பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர் வைரலாகும் புகைப்படம்….!!!

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் துணிவு . இந்த திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாவது தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.வங்கிக் கொள்ளை கதையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்தது .
இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி .எம். சுந்தர், மகாநதி சங்கர், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் விபரீத முறையில் துணிவு படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர் ஒருவர் செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. புதுச்சேரியை சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் துணிவு படத்தின் அப்டேட் கேட்டு தனது கையில் எழுதி அதனை வீடியோ எடுத்து whatsapp குழுவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.