LATEST NEWS
அமரன் படத்தை வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்.. அதுவும் எத்தனை கோடி தெரியுமா..? வெளியான தகவல்..!!

பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். இது சிவகார்த்திகேயனின் 21-வது படம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். மேலும் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.
அமரன் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் அமரன் படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த்.வி என்கிற ராணுவ அதிகாரியின் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
ஏற்கனவே படத்தின் ஓடிடி உரிமையை ரெட்பிக்ஸ் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அமரன் படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்ததாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் ஒரு படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ஒவ்வொரு படத்திலும் தன்னை வித்தியாசமாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாளுக்கு நாள் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் அதிகரித்துக் கொண்டே போகிறது.