என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு 1 ரூபாய் கூட வருமானம் இல்லை.. ஏ.ஆர் ரகுமானுக்கு சம்பந்தம் இருக்கிறதா..? புலம்பும் சந்தோஷ் நாராயணன்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு 1 ரூபாய் கூட வருமானம் இல்லை.. ஏ.ஆர் ரகுமானுக்கு சம்பந்தம் இருக்கிறதா..? புலம்பும் சந்தோஷ் நாராயணன்..!!

Published

on

மஜா ஸ்டூடியோஸ் என்ற யூடியூப் சேனலில் கடந்த 2021-ஆம் ஆண்டு என்ஜாய் எஞ்சாமி என்ற பாடல் வெளியானது. அறிவு எழுதிய பாடலுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். அந்த பாடலை அறிவும் பாடகி தீயும் இணைந்து பாடினர். இதுவரை யூட்யூபில் 48 கோடிக்கும் அதிகமானோர் என்ஜாய் எஞ்சாமி பாடலை பார்த்துள்ளனர். இந்த பாடல் வெளியாகி 3 ஆண்டுகள் ஆனது.

இதனை முன்னிட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் என்ஜாய் எஞ்சாமி பாடல் மூலம் எங்களுக்கு ஒரு ரூபாய் கூட வருமானம் வரவில்லை. இது குறித்து மஜ்ஜா நிறுவனத்தை தொடர்பு கொண்டு எங்களால் எதையும் கேட்க முடியவில்லை. உலக புகழ் பெற்ற கலைஞர்கள் அதில் இடம்பெற்றுள்ளார்கள்.

Advertisement

முன்னதாக மஜ்ஜா ஸ்டுடியோ நிறுவனத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ஆலோசகராக செயல்படுவதால் அவர் மீது சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் என ஆரம்பித்தது. இசை கலைஞர்களுக்கு அவர் உதவவில்லை என பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அதில் ஏ.ஆர் ரகுமான் எப்போதும் எங்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

எங்களைப் போலவே அவரும் இந்த விஷயத்தில் போலியான வாக்குறுதிகளை நம்பி ஏமாறுந்தார். நான் உள்பட யாருமே என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு எந்த வருவாயும்வரவில்லை. எங்களை மிரட்டும் வகையில் மின்னஞ்சல்களும் வரும் விரைவில் அறிவு மற்றும் இயக்குனர் பா. ரஞ்சித்துடன் இணைந்து எதிர்காலத்தில் தனி இசை கலைஞர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்வோம் என கூறி இருந்தார்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement