LATEST NEWS
‘அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்’.. கேரளாவில் சூப்பர் ஸ்டாரின் காரை தொட்டு கும்பிட்ட தீவிர ரசிகர்…! வைரலாகும் வீடியோ…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து ரஜினியின் 170 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்க உள்ளார். தலைவர் 170 படத்தில் பகத் பாஸில், ராணா, அமிதாப்பச்சன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. தினமும் பட குழுவினர் புதிய புதிய அப்டேட்டுகளை வழங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார்.
. @rajinikanth Spotted In Trivandrum Kerala #Thalaivar170 Shooting Spot 📸 pic.twitter.com/ywbeILSXTk
— Arun Vijay (@AVinthehousee) October 5, 2023
சமீபத்தில் தலைவர் 170 படத்தின் ரஜினி லுக் போஸ்டர் வெளியானது. இதனைத் தொடர்ந்து தலைவர் 170 படத்தின் பூஜையும் எளிமையாக நடந்து முடிந்தது. தற்பொழுது இத்திரைப்படத்தின் ஷூட்டிங்கிற்காக ரஜினி கேரளா சென்றுள்ளார். அங்கு அவருடைய கார் வரும் வழியில் நின்று ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அப்பொழுது அங்கிருந்த தீவிர ரசிகர் ஒருவர் சூப்பர் ஸ்டாரின் காரை தொட்டு கும்பிட்டு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
Another Video From #Thalaivar170 Spot pic.twitter.com/jnpBqKJH4N
— Arun Vijay (@AVinthehousee) October 5, 2023