CINEMA
அடேங்கப்பா…! நடிகை ராதிகாவிற்கு இவ்ளோ சொத்து இருக்குதா…? மூக்கில் விரல் வைக்கும் ரசிகர்கள்…!!

எம்.ஆர் ராதாவின் மகளான நடிகை ராதிகா பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். வெளிநாட்டில் படிப்பை முடித்து விட்டு வந்த இவரை பாரதிராஜா எதார்த்தமாக பார்த்து இருக்கிறார். அதனை அடுத்து சினிமாவில் நடிப்பதற்கு பேசி சம்மதம் வாங்கியுள்ளார். இவர் நடித்த முதல் படமே மிகப்பெரிய ஹிட் அடித்ததால் அடுத்த அடுத்த பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
ஒரு கட்டத்தில் ஹீரோயின் வாய்ப்பு குறைந்ததால் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தினார். சினிமா மட்டுமின்றி சீரியல்களிலும் நல்ல இடத்தை பிடித்து வைத்துள்ளார். இயக்குனர் பிரதாப் போதனை திருமணம் செய்த இவர் அவரை விவகாரத்தை செய்த பிறகு நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்ததோடு இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.
இந்நிலையில் இவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகை ராதிகாவிற்கு மொத்தம் 120 கோடி ரூபாய் வரை சொத்து மதிப்பு இருக்கிறதாம். சென்னையில் ஒரு பிரமாண்ட வீடும் உள்ளதால் மேலும் சினிமாவில் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் முதலீடு செய்திருப்பதாகவும் அதன் மூலமும் வருமானம் வருவதாகவும் கூறப்படுகிறது.