“கல்யாணம் நின்னதுக்கு நீதான் காரணம்” பக்கத்துவீட்டுக்காரர் மீது மிளகாய்ப்பொடி தூவி… கூலிப்படையை வைத்து தாக்கிய கொடூரம்.. கேரளாவில் அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கல்யாணம் நின்னதுக்கு நீதான் காரணம்” பக்கத்துவீட்டுக்காரர் மீது மிளகாய்ப்பொடி தூவி… கூலிப்படையை வைத்து தாக்கிய கொடூரம்.. கேரளாவில் அதிர்ச்சி..!!

Published

on

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பெராம்பிரா பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரஷீத் மற்றும் அவரது மனைவி ஷம்னா ஆகியோர், முகமூடி அணிந்த கூலிப்படையினரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது திருமணம் நின்றுபோனதற்கு அண்டை வீட்டுக்காரரான ரஷீத் தான் காரணம் என்று தவறாகக் கருதி, பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞர் ஒருவரே கூலிப்படையை ஏவி இந்தத் திட்டமிட்ட தாக்குதலை நடத்தியிருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த தம்பதியரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, உடனடியாக கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இச்சம்பவம் குறித்து பெராம்பிரா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர்களையும், அதற்கு காரணமான அண்டை வீட்டு இளைஞரையும் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in