அடடே நீங்களுமா இருக்கீங்க…? பிரம்மாண்டமாக நாளை தொடங்கவுள்ள பிக் பாஸ் சீசன் 7…! வெளியான இறுதி போட்டியாளர்கள் லிஸ்ட்…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அடடே நீங்களுமா இருக்கீங்க…? பிரம்மாண்டமாக நாளை தொடங்கவுள்ள பிக் பாஸ் சீசன் 7…! வெளியான இறுதி போட்டியாளர்கள் லிஸ்ட்…!

Published

on

தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. திரு.கமல்ஹாசன் அவர்கள் தொகுப்பாளராக இருந்து வந்ததே இந்நிகழ்ச்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இதுவரை 6 சீசன்கள் கடந்திருக்கும் பிக் பாஸ் தற்போது ஏழாவது சீசனை எதிர்நோக்கி செல்கிறது. கடந்த சீசனில் அசிம் ,தனலட்சுமி, ஜனனி, ஷிவின் ,விக்ரமன் ஆகிய போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடியது நாம் அனைவரும் அறிந்ததே .

கடந்த ஆறாவது சீசனில் அசிம் முதலிடத்திலும், விக்ரம் இரண்டாம் இடத்தையும், ஷிவின் மூன்றாம் இடத்தையும் பிடித்தார். தற்பொழுது ஒளிபரப்பாகவிருக்கும் ஏழாவது சீசனில் யார் உள்ளே வரக்கூடும் என்பது பற்றி மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இந்த 7 வது சீசன் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து இதில் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் தான் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

விசித்ரா:

அதன்படி குக் வித் கோமாளி விசித்ரா, வெள்ளித்திரையில் பிரபலமான இவர் தற்பொழுது சின்னத்திரையிலும் கால்பதித்து கலக்கி வருகிறார். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

வினுஷா:

‘பாரதி கண்ணம்மா’வில் கண்ணம்மாக ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார். இதைதொடர்ந்து இவர் தற்பொழுது வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார்.

Advertisement

 

யுகேந்திரன்:

Advertisement

மறைந்த பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன். தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் பின்னணிப் பாடகர். சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். நடிகராகவும் பல படங்களில் கால் பதித்து கலக்கியவர். இவரும் தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார் என கூறப்படுகிறது.

நிக்‌ஷன்:

Advertisement

இவர் ஒரு இளம் பாடலாசிரியர். சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் என கூறப்படுகிறது. இவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார்.

மூன் நிலா:

Advertisement

இவர் ஒரு மலேசியத் தமிழ்ப் பெண். சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார்.

ரவீனா தாஹா:

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மௌன ராகம் சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை ரவீனா தாஹா. இதைத்தொடர்ந்து இவர்  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்பொழுது வெள்ளித்திரையில் கால் பதித்து கலக்கி வருகிறார்.

நிவிஷா:

Advertisement

சன் டிவி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த ஒரு சீரியல் நடிகை தான் நடிகை நிவிஷா. இவரும் தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார். இவர்களுடன் தர்ஷா குப்தா, பாலசரவணன், விஜய் வர்மா, விஜய் கந்தன், ஃப்ரெடரிக் ஜான்சன், வி.ஜே.பார்வதி, ரக்ஷன், டான்ஸ் மாஸ்டர் ஶ்ரீதர் ஆகியோரது பெயர்களும் இருப்பதாகவும், இவர்களில் ஒரு சிலர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 

Advertisement
Continue Reading
Advertisement