LATEST NEWS
என்னது இரவின் நிழல் படத்துக்கு 120 விருதுகளா?.. முடிஞ்சா நிரூபித்து காட்டு… பார்த்திபனை வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்..!!

69ஆவது தேசிய திரைப்பட விருதுகள் பெரியோரின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பல்வேறு பிரிவுகளில் பலருக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு பார்த்திபன் இயக்கிய நடித்த இரவின் நிழல் திரைப்படத்தில் இடம் பெற்ற மாயவா தூதுவா என்ற பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னணி பாடகி என்ற பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எப்போதும் தன்னுடைய படங்களுக்கு போதுமான அங்கீகாரம் இல்லை என்று ஆதங்கப்படும் பார்த்திபன் இணையவாசிகளால் ட்ரோல் செய்யப்பட்டு வந்தார்.
அதே சமயம் தனது படத்தில் இடம்பெற்ற பாடலுக்காக விருது பெற்ற மகிழ்ச்சியில் twitter பக்கத்தில், இரவின் நிழல் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி. இந்தப் பாடலுக்கு முழு முதல் காரணமான ஏ ஆர் ரகுமானுக்கு நன்றி. 120 தேசிய விருதுகளை இரவின் நிழல் திரைப்படம் வென்றிருந்தாலும் தேசிய விருது பெருமைக்குரியது என்று பார்த்திபன் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த பதிவை பார்த்த விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன், 120 தேசிய விருதுகள், இந்த 120 விருதுகளையும் மீடியா முன்பு வைத்து உண்மையை நிரூபிக்க முடியுமா? ஏதாவது சான்றுகள் உள்ளதா என்று கூறி நடிகர் பார்த்திபனை வம்புக்கு இழுத்துள்ளார். தற்போது அவரின் ட்விட்டர் பதிவை இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கோடம்பாக்கத்தின் இன்னொரு ராட்சச சைஸ் வடை:
120 சர்வதேச விருதுகள்!!!
இந்த 120 விருதுகளையும் மீடியா முன்பு வைத்து உண்மையை நிரூபிக்க முடியுமா? ஆன்லைன் சான்றிதழ்கள் எத்தனை? நேரில் தரப்பட்ட விருதுகள் எத்தனை?
ஒருவேளை இது உண்மையாகவே இருந்தாலும் (வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை)..… pic.twitter.com/3IrU0Xwo3e
— Blue Sattai Maran (@tamiltalkies) August 26, 2023