ஐயோ கடவுளே.. வீட்டின் முற்றத்தில் கிடந்த 23 வயது மனைவியின் சடலம்.. மாட்டுத் தொழுவத்தில் ரத்த கறையுடன் ஒளிந்திருந்த கணவன்.. நடுங்க வைக்கும் பின்னணி…!! – cinefeeds
Connect with us

CRIME

ஐயோ கடவுளே.. வீட்டின் முற்றத்தில் கிடந்த 23 வயது மனைவியின் சடலம்.. மாட்டுத் தொழுவத்தில் ரத்த கறையுடன் ஒளிந்திருந்த கணவன்.. நடுங்க வைக்கும் பின்னணி…!!

Published

on

உத்தரகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் உள்ள கால்சி என்ற இடத்தில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த மனோஜ் என்ற நபர், தனது 23 வயது மனைவி நீலமை ‘பாட்டல்’ எனப்படும் கூர்மையான அரிவாளால் வெட்டி படுகொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமணாமாகி 5 ஆண்டுகள் ஆகும் இந்தத் தம்பதியினருக்கு இடையே நீண்ட நாட்களாகவே கடுமையான குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த மனோஜ் வீட்டில் இருந்த ஆயுதத்தால் நீலமின் கழுத்துப் பகுதியில் கொடூரமாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இந்தக் கொடூரக் கொலைக்குப் பிறகு, மனைவியின் உடலை வீட்டின் முற்றத்தில் வீசிவிட்டு, கொலையாளி மனோஜ் கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு மாட்டுத் தொழுவத்தில் சென்று தலைமறைவாகி ஒளிந்து கொண்டார். இதுகுறித்துத் தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். பின்னர், கிராம மக்களின் உதவியுடன் மாட்டுத் தொழுவத்தில் பதுங்கியிருந்த குற்றவாளி மனோஜை போலீசார் அதிரடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in