LATEST NEWS
அம்பானி வீட்டு திருமணத்திற்கு செல்லும் பிரபலங்கள்.. யார், யாருன்னு தெரியுமா..? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

முகேஷ் அம்பானியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரன் மெர்சன்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டுக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. முகேஷ் அம்பானி தனது மகனின் திருமணத்தை ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முன்னணி தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், திரைப்படங்கள் என பல்வேறு துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், அவரது முன்னாள் மனைவி மெலிண்டா, குமார் மங்கலம் பிர்லா, கௌதம் அதானி, சஞ்சீவ் கோயங்கா, ரோஷினி, சுனில் மிட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் திரை பிரபலங்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ரஜினிகாந்த், ஷாருக்கான், அமீர்கான், அக்ஷய்குமார், சல்மான் கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஆலியா பட், சித்தார்த் மல்கோத்ரா, வருண் தவான் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு முந்தைய விருந்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட், ரன்பீர் கபூர், பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி, அமீரக தொழிலதிபர் முகமது அலப்பர், பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர், இவான்கா ட்ரம்ப் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் இசான் கிஷன், சூரியகுமார் யாதவ், சாய்னா நேவால், கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் அவரது மனைவி, வீரர் பிராவோ, மகேந்திர சிங் தோனி அவரது மனைவி சாக்ஷி இயக்குனர் அட்லி ப்ரியா தம்பதியினர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் ஹைதிராபாத் படபிடிப்பில் பிஸியாக இருப்பதால் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்பது தெரியவில்லை.