கணவர் மனைவிக்கு ஏற்பட்ட கொடூரம்… லாரி சக்கரத்தில் சிக்கி கோர மரணம்..!! - cinefeeds
Connect with us

Uncategorized

கணவர் மனைவிக்கு ஏற்பட்ட கொடூரம்… லாரி சக்கரத்தில் சிக்கி கோர மரணம்..!!

Published

on

கும்மிடிப்பூண்டி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி கணவர் கண்முன்னே மனைவி துடித்துக்க தலை நசுங்கி பரிதாபமாக பலியானார்.

சென்னை அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த சரவணன் கும்மிடிப்பூண்டி அடுத்த நத்தம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தனது மனைவி தாட்சாயிணியோடு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

Advertisement

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, செங்குன்றத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற லாரி ஒன்று, மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது. இதில் நிலைத்தடுமாறிய கணவன், மனைவி மோட்டார் இருவரும் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.

அப்போது, பின்னால் வந்த லாரி, தாட்சாயிணியின் தலை மீது ஏறி இறங்கியதில், தலை நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக பலியானார். கணவன் கண்முன்னே மனைவி துடி துடித்து இறந்ததை கண்ட கணவன் கதறி அழுதார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in