LATEST NEWS
6 வருடங்களுக்கு பிறகு இரண்டாம் திருமணம் செய்ய முடிவு செய்த டிடி…. அதுவும் யாரை தெரியுமா?…. தீயாய் பரவும் செய்தி….!!!!

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள காபி வித் காதல் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
இதனிடையே பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த டிடி தற்போது உடல் நல குறைவு காரணமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை நிறுத்திவிட்டார். முக்கியமான படங்களின் ப்ரோமோஷன் இன்டர்வியூ மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை டிடி திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார்.
அதன் பிறகு தனிமையில் வாழ்ந்து வரும் டிடி இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.