LATEST NEWS
தலைவர் என்றால் சும்மாவா?….. மீண்டும் இணைய போகும் பிரிந்த தம்பதிகள்….. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!!

விவாகரத்தான தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் இணையுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். தற்போது பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என்று கலக்கி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படம் இரண்டும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வரும் இவரின் குடும்ப வாழ்க்கை தற்போது சரியில்லை.
2004 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தனுஷ். 18 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் திடீரென்று தங்களது சமூக வலைதள பக்கத்தில் பிரிவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த அறிவிப்பால் ரஜினியும் அந்த பக்கம் தனுஷின் தந்தையான கஸ்தூரிராஜாவும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இருவரையும் சேர்த்து வைக்க இவர்கள் இருவரும் போராடி வந்தனர். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
கடைசிவரை இருவரும் மீண்டும் இணைந்து வாழ ஒப்பு கொண்டதாக தெரியவில்லை. சமீபத்தில் இருவரும் மீண்டும் இணைவது தொடர்பாக சமரசம் செய்துள்ளதாகவும் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.