LATEST NEWS
தனுஷ் நடிக்கும் 51-வது படத்தின் டைட்டில் என்ன தெரியுமா..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை இயக்கி நடிக்க உள்ளார்.
தற்போது தனுஷ் நடிக்கும் 51-வது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த படத்தை சேகர் கமுலா இயக்குகிறார். இதனை சுனில் நாரங், புஷ்கர் ராம் மோகன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தில் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, சவுரவ் கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தனுஷின் 51வது படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது.
இந்த படத்திற்கு DNS என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் பெயர், பர்ஸ்ட் லுக் ஆகியவை இன்று மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

#image_title