LATEST NEWS
612 கோடி பட்ஜெட்டில் லியோ படத்தை இயக்கிய இயக்குனருக்கு சம்பள பாக்கியா?.. அப்செட்டில் லோகேஷ் கனகராஜ்.. உண்மை என்ன..??

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் தன்னுடைய திரை பயணத்தில் குறுகிய காலத்தில் ஒரு அபாரமான வளர்ச்சியை பெற்றுள்ளார். இறுதியாக இவர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இந்தப் படத்தில் விஜய்யுடன் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
சுமார் 612 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்ட நிலையில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சம்பளம் பாக்கி வைத்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியானது. அதாவது லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை முழுமையாக தரவில்லை என்றும் இன்னும் சம்பளத்தொகை பாக்கி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சம்பளத்தை முழுமையாக தராமல் காலதாமதம் செய்து வருவதால் லோகேஷ் கனகராஜ் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் இதனால் லியோ பட தயாரிப்பாளர்களுக்கு எதிராக அவர் இயக்குனர் சங்கத்தை அணுக உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இருந்தாலும் கிளியோபட தயாரிப்பாளருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் விநியோகஸ்தர் மற்றும் சமூக ஊடகப் பிரபலம் கார்த்திக ரவிவர்மன் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
விஜய் மற்றும் அவரின் படங்களுக்கு எதிராக போலியான செய்திகளை பரப்புவதற்காக இப்படி ஒரு செய்தி பரவுவதாக கூறப்படுகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் சம்பளம் முழுமையாக தரப்பட்டு விட்டதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்திற்கு ஆறு கோடி சம்பளம் வாங்கிய லோகேஷ் கனகராஜ் விஜயின் லியோ படத்திற்கு மிகப்பெரிய அளவில் சம்பளத்தை உயர்த்தி சுமார் 20 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகின்றது