CINEMA
அம்பேத்கருக்கு நன்றி சொன்ன பா.ரஞ்சித்…. மேடையில் கண் கலங்கிய விக்ரம்…. எதற்காக தெரியுமா…??

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் தங்கலான். இந்த படத்தில் சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஏ.கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். வருகின்ற 15ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம்,. கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினரோடு நடிகர் சிவகுமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசுகையில், மகிழ்ச்சியான தருணம் இது. விக்ரமை பல வடிவத்தில் எனக்கு பிடிக்கும் .அவர் ஏற்று நடித்த பல கதாபாத்திரங்கள் எனக்கு பிடிக்கும். மற்ற நடிகர்களைப் போல விக்ரமை பார்த்ததில்லை. அவர் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்காக தன்னை வருத்திக் கொள்பவர். முதலில் அவருடன் இணைந்து பணியாற்றும் பொழுது எனக்குள் பயம் இருந்தது. இந்த சமூகத்தில் இருந்து நான் நிறைய கற்று இருக்கிறேன். அதில் இன்பங்களும் துன்பங்களும் உண்டு.
இந்த சினிமா உங்களுக்குள் இருக்கும் அந்த உணர்வை தொடும் என்று நான் நம்புகிறேன். இதன் மூலமாக இந்த படம் சில விவாதங்களை ஏற்படுத்தும். சில கேள்விகளையும் எழுப்பும். இந்த கேள்விகளுக்கான பதிலை தேடுவதன் மூலம் வரலாற்றில் நாம் மறந்த, மறைத்த பல விஷயங்களுக்கான பதிலை பெற முடியும் என்று நம்புகிறேன். இதுதான் என்னுடைய வலிமை என நம்புகிறேன்.
இதுதான் என்னுடைய அரசியல். இந்த அரசியல் இல்லை என்றால் நான் இல்லை. இதற்காக அண்ணன் பாபா சாஹிப் அம்பேத்கருக்கு நான் மிகப்பெரிய நன்றியை சொல்கிறேன். அவர்தான் நீ உன் சமூகத்திற்காக… உன் மக்களுக்காக பேசி ஆக வேண்டும் என்ற உத்வேகத்தை வழங்கியவர் என்று கூறியுள்ளார். இவ்வாறு படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பா.ரஞ்சித் நினைவு கூறும்போது விக்ரம் கண் கலங்கியது பார்வையாளர்களை நெகிழச் செய்தது.