LATEST NEWS
படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய இயக்குனர் சுதா கொங்கரா…. என்னாச்சு?…. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சுதா கொங்கரா. இவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிறந்த இயக்குனரை காண தேசிய விருது இவளுக்கு கிடைத்தது. அதே சமயம் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும் சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளையும் பெற்றனர்.
இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படம் தற்போது தமிழில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இதன் படப்பிடிப்பின் போது இயக்குனர் சுதா கொங்கராவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள twitter பதிவு இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் படப்பிடிப்பு தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இவர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் வேண்டி வருகிறார்கள்.
https://twitter.com/Sudha_Kongara/status/1622102284279889920