LATEST NEWS
கேக் ஊட்டி, கணவருக்கு முத்தம் கொடுத்து வாழ்த்து சொன்ன நயன்தாரா…! ஷங்கர் சார் அங்க என்ன பாக்குறீங்க..?

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்தது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டதும் , திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக கூறி திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்ததும் நாம் அனைவரும் அறிந்ததே.
தற்பொழுது நயன்தாரா தனது குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என பெயர் சூட்டியுள்ளார். இரண்டு குழந்தைகளும் அழகாக மளமளவென்று வளர்ந்து விட்டனர். நடிகை நயன்தாரா சமீபத்தில் முதன்முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். மேலும் அவர் தனது முதல் பதிவாக தனது குழந்தைகளின் முகத்தை வெளிஉலகிற்கு வீடியோவாக வெளியிட்டு காட்டினார்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனுக்கு முத்தமிட்ட படி புகைப்படங்களை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை சமீபத்தில் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் ஷங்கர், லோகேஷ் கனகராஜ் என பிரபலங்கள் பலர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram