LATEST NEWS
அமீர் – பாவ்னி லவ் மேட்டர் தெரிந்தவுடன் அஜித் என்ன சொன்னார் தெரியுமா?…. அவர்களே கூறிய உண்மை இதோ…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை திருப்தி படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் அமீர் மற்றும் பாவ்னி ஜோடிகள் நடித்துள்ளனர். இவர்கள் அஜித்துடன் நடித்த அனுபவத்தையும் தங்களின் காதல் மேட்டர் தெரிந்து அஜித் என்ன கூறினார் என்பதையும் வெளிப்படையாக கூறியுள்ளனர்.
அஜித் அருகில் அமர வேண்டும் என்பதால் அமீர் அப்படியே அசையாமல் இருப்பாராம். அதனைப் போலவே தான் வரும் போதே யாரும் எந்திரிக்கக் கூடாது என்றும் மீறினால் பெபிகாயில் போட்டு ஒட்டி விடுவேன் என்றும் அஜித் மிரட்டுவாராம். அது மட்டுமல்லாமல் அமீர் மற்றும் பாவணி காதல் விஷயம் தெரிந்தவுடன் அவர்களை கூப்பிட்டு வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் என்ன செய்யக்கூடாது என்பதையும், எப்படி வாழ்க்கை கொண்டு போக வேண்டும் என்பதையும் அஜித் அறிவுரையாக கூறியதாக அவர்கள் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.