நியூயரில் தன்னை சந்திக்க திரண்ட தொண்டர்களுக்கு…. விஜயகாந்த் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நியூயரில் தன்னை சந்திக்க திரண்ட தொண்டர்களுக்கு…. விஜயகாந்த் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். கருப்பு நிறம், கலையான முகம் மற்றும் தேசியப்பற்று என்று புள்ளிவிவரத்தை அப்படியே கூறலாம். சினிமாவில் இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து உள்ளன. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அரசியலிலும் களமிறங்கினார். ஆனால் அவருக்கு இடையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அப்படியே வீட்டில் முடங்கி விட்டார்.

மக்களுக்காக எப்போதும் குரல் கொடுக்கும் இவர் இப்போதெல்லாம் மக்களை சந்திப்பது கிடையாது. ஏனென்றால் அவரின் உடல்நிலை தான் அதற்கு முக்கிய காரணம். இந்நிலையில் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் விதமாக புத்தாண்டு அன்று விஜயகாந்தை சந்திக்கலாம் என அண்மையில் அறிவிப்பை வெளியாகி இருந்தது. இதனால் நீண்ட நாள் கழித்து விஜயகாந்தை சந்திப்பதற்கு தொண்டர்கள் அனைவரும் கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் திரண்டனர்.

Advertisement

அப்போது ரசிகர்களை சந்திக்க வந்த விஜயகாந்த் கைகளை கூட அசைக்க முடியாத நிலையில் வீல்சேரில் வந்தது ரசிகர்களின் மனதை உலுக்கியது. இருந்தாலும் அதே உற்சாகத்தோடு மக்களை பார்த்து கையசைத்தார். அது மட்டுமல்லாமல் வீட்டிற்கு வந்த அனைத்து தொண்டர்களுக்கும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நூறு ரூபாய் கொடுத்து அனுப்பி உள்ளார். அது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in