CRIME
“போலீஸ் மகளுக்கே இந்த நிலைமையா..?” வீட்டின் முன் நின்ற 19 வயது பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து.. மர்ம கும்பல் செய்த பகிர் காரியம்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி வீடியோ..!!
உத்தரப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில், போக்குவரத்துத் துறையில் காவலராகப் பணிபுரியும் ஒருவரின் 19 வயது மகள், அவரது வீட்டின் முன்பிருந்து இரண்டு மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லால்பாய் புல்பாய் பகுதியில் உள்ள அவரது வீட்டின் வெளியே இரவு சுமார் 8 மணி அளவில் அந்த இளம் பெண் நின்று கொண்டிருந்தபோது, அங்கு பதிவு எண் இல்லாத கருப்பு நிற கார் ஒன்றில் இரண்டு நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் அந்தப் பெண்ணைக் கட்டாயப்படுத்தி காரினுள் இழுக்க முயன்றபோது, அவரது குடும்பத்தினர் ஓடிவந்து தடுக்க முயன்றுள்ளனர். எனினும், அக்கம்பக்கத்தினர் பார்ப்பதற்குள் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்துப் போட்டுக்கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடியுள்ளது.
இந்தத் துணிகரக் கடத்தல் சம்பவம் அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது. காவலரின் மகளே கடத்தப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உஜ்ஜைன் போலீசார் சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு கடத்தல்காரர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
