CINEMA
ஷூட்டிங்க் ஸ்பாட்டிலில் கெட்ட வார்த்தை பேசிய கவின்…. உண்மையை உடைத்த பிரபலம்…!!

நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தேடி தந்தது விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியல் தான். அந்த சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார்.
இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் என்ற படத்தில் கவின் நடிக்கும் பொழுது சூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பாளரை கெட்ட வார்த்தை பயன்படுத்தி கோபமாக திட்டியுள்ளார். இவர் எல்லா படப்பிடிப்புகளிலும் இப்படி தான் நடந்துகொள்வார் என்று பிஸ்மி கூறியுள்ளார்.