LATEST NEWS
குக் வித் கோமாளி செஃப் தாமுவின் மகளை பார்த்துள்ளீர்களா?…. எங்கு இருக்க தெரியுமா?…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்….!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் பிரபல செஃப்களான செஃப் தாமு மற்றும் வெங்கடேஸ் பட் ஆகியோர் வழிநடத்தினர்.இவர்கள் அந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக இருப்பது மட்டுமல்லாமல் கோமாளிகளுடன் களத்தில் இறங்கி காமெடியை பட்டை கிளப்புவர். அதனால் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதில் செஃப் தாமு பல சமையல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இவரின் சமையல்கள் அனைத்துமே அடி தூளாக இருக்கும்.
இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமும் உள்ளது. இவர் தனது அத்தை மகளான உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ரேணுகா மற்றும் அக்ஷயா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகளான அக்ஷயா லண்டனில்மருத்துவ படிப்பு முடித்துள்ள நிலையில் தற்போது சென்னையில் இவர் ஒரு மருத்துவமனையையும் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகள் உள்ளார்.
தாமுவின் மூத்த மகளான ரேணுகாவும் லண்டனில் தான் உள்ளார். லண்டன் தொழிலதிபர் பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது இவர் சென்னைக்கு வந்து செல்வார். இந்நிலையில் லண்டனுக்கு மகளை பார்ப்பதற்காக சமீபத்தில் தாமு சென்றுள்ளார். அந்தப் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க