LATEST NEWS
திருமதி செல்வம் சீரியல் நாயகி அபிதாபின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் க்யூட் புகைப்படம் இதோ….!!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுமே பொதுவாக குடும்ப கதைகளை மையமாகக் கொண்டு தான் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் பல சீரியல்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளன. அப்படி சன் டிவியில் ஒளிபரப்பாகி கோடிக்கணக்கான ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சீரியல்களில் ஒன்றுதான் திருமதி செல்வம். இந்த சீரியலில் சஞ்சீவ் மற்றும் அபிதா இருவரும் கணவன் மனைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
அவர்களில் அபிதா இந்த தொடரில் நடிப்பதற்கு முன்பே சேது திரைப்படத்தில் நாயகியாக நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து அசத்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 15 க்கும் மேற்பட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு சுனில் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளன. அவர்களின் குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.