தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அர்ஜுனன்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் சித்தார்த் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்.

இந்த திரைப்படத்தில் இவரின் வேடம் பலரையும் வெகுவாக கவர்ந்தது.

அதனால் இவருக்கு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

காமெடி மற்றும்  குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர் ஆதலால் காதல் செய்வீர், பிரம்மன், வாயை மூடி பேசவும், டார்லிங் 2, மீண்டும் ஒரு காதல் கதை, புரியாத புதிர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இவரின் மகன்தான் சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படத்தில் நடித்த சிறுவன் இலன்.

இவருக்கு மகன் மட்டும் இல்லை சுட்டியான ஒரு மகளும் உள்ளார். இது பலரும் அறிந்ததுதான் ,

அவர் மகளின் பெயர் இயல். இவர்கள் இருவருமே இரட்டைக் குழந்தைகளாம்.

 

இவரின் மகள் தற்போது தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

லியோ திரைப்படத்தின் பூஜையின் போது வெளியான புகைப்படங்களில் அவரின் மகளின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது.

தற்போது அர்ஜுனனின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.