LATEST NEWS
காஸ்மெட்டிக் சர்ஜரி செய்துக்கொண்டேனா?….. எதுக்கு இப்படி பேசுறீங்க….. நடிகை விளாசல்…!!!!

தமிழ் சினிமாவில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே . அதன் பிறகு தமிழில் பெரிய அளவில் எந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு மொழியில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பல படங்கள் ஹிட்டு கொடுத்ததால் தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். அதன் பிறகு விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
நடிகை என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அந்த வகையில் தனது மூக்கின் ஷேப் மீது பூஜா ஹெக்டேவிற்கு திருப்தி இல்லை என்று கூறப்பட்டு வருகின்றது. அதற்காக வெளிநாடு சென்று அறுவை சிகிச்சை மூலம் மூக்கின் ஷேப்பை மாற்ற பூஜா ஹெக்டே முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பேசிய அவர் கூறியதாவது “நடிகர்கள், நடிகைகள் குறித்து சமீப காலமாக ஆதாரமற்ற புகார்கள் வந்து கொண்டிருக்கின்றது. காஸ்மெட்டிக் சர்ஜரி சிகிச்சை செய்வதற்காக வெளிநாடு செல்ல உள்ளேன் என்று தவறாக செய்தி பரப்பப்பட்டு வருகின்றது. ஆனால் தான் தற்போது ஹைதராபாத்தில் உள்ளேன். அதனால் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று அவர் கூறியுள்ளார்.