LATEST NEWS
தமிழ் சினிமாவின் “ஆல் இன் ஆல் அழகுராஜா” கவுண்டமணி…. திரைப்பயணம் குறித்து இதோ ஒரு சிறப்பு தொகுப்பு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் கவுண்டமணி.
இவரின் காமெடிக்கு இன்றும் தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் ஆரம்பித்த இவரின் காமெடி மாரத்தானில் “சின்ன வாத்தியார்” திரைப்படம் கவுண்டமணியை காமெடியில் பெரிய வாத்தியார் என நிரூபித்தது.
அடுத்ததாக கவுண்டமணியின் கவுண்டர் ஸ்பெஷல் நிறைந்த திரைப்படமாக நாட்டாமை திரைப்படம் அமைந்தது.
கவுண்டமணி செந்தில் உடன் நடித்த அனைத்து திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.
இவர்கள் இருவரின் காமெடியை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. அதிலும் குறிப்பாக கவுண்டமணியின் சில திரைப்பட காமெடிகள் மற்றும் டயலாக் என்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.
இவர் மீண்டும் எப்போது திரைக்கு வருவார் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றன.
ஆல் இன் ஆல் அழகுராஜா என்று அறியப்படுபவர் தான் கவுண்டமணி. இவரை நகைச்சுவை சக்கரவர்த்தி என்றுதான் ரசிகர்கள் மற்றும் சக கலைஞர் குறிப்பிடுகிறார்கள்.
தமிழ் திரை உலகில் அழிக்க முடியாத நகைச்சுவையை செய்து தினந்தோறும் நம்மை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் புகழ் இவரையே சேரும்.
இவர் இறுதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான வாய்மை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது நல்ல திரைப்படத்திற்காக காத்திருக்கின்றார்.
கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேல் திரை வாழ்க்கையில் இருந்து விலகி இருக்கும் கவுண்டமணி விரைவில் மீண்டும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு பல புகழுக்குரிய கவுண்டமணி கடந்த 1963 ஆம் ஆண்டு சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளன. தற்போது கவுண்டமணியின் திருமணம் மற்றும் மகள்களின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.