LATEST NEWS
கடைசி மூச்சு வரை சினிமாவிற்காக உழைத்த நடிகர் மயில்சாமி…. இறுதியாக வெளியான கலங்க வைக்கும் வீடியோ….!!!!!!

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி நேற்று மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. தாவணி கனவுகள் என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் உடன்பால் திரைப்படம் வரை தனது நடிப்பால் நகைச்சுவையால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டி போட்டவர்.
தீவிர சிவபக்தனான இவர் சிவபெருமானின் திருநாளான சிவராத்திரி தினத்தில் உயிரிழந்தே சிவ பக்தன் ஆகிவிட்டார்.தன்னிடம் இருக்கும் அனைத்தையும் மற்றவர்களுக்கு கொடுத்து அழகு பார்த்த மாமனிதர். வாரி வாரி வழங்குவதில் வல்லவர்.
இவர் நடிகராக மட்டுமல்லாமல் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தமிழில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களுக்கு டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். இப்படி பன்முகத் திறமை கொண்ட இவர் நேற்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவரின் மரணச் செய்தி திரையுலகினர் மட்டுமல்லாமல் இவரை நான் ஒருவேளை உணவு சாப்பிட்டவர்கள் கூட இவருக்காக கதறி அழுது புலம்புகிறார்கள். என் நிலையில் இவர் படம் ஒன்றுக்காக டப்பிங் செய்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதுதான் இவரின் இறுதி பேச்சாக இருக்கும் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
https://twitter.com/dnextoff/status/1627085969894825986