அடேங்கப்பா..! மகாத்மா காந்தியின் ஒரு கடிதத்தின் விலை இத்தனை கோடியா..? ஏல சந்தையில் உலகை மிரள வைத்த வரலாற்றுச் சாதனை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா..! மகாத்மா காந்தியின் ஒரு கடிதத்தின் விலை இத்தனை கோடியா..? ஏல சந்தையில் உலகை மிரள வைத்த வரலாற்றுச் சாதனை..!!

Published

on

மகாத்மா காந்தி தனது கைப்பட எழுதிய கடிதங்களின் அரிய தொகுப்பு ஒன்று, ‘சாப்ரானார்ட்’ நிறுவனம் நடத்திய ஏலத்தில் ரூ.16.20 கோடிக்கு ஏலம் போய் உலக சாதனை படைத்துள்ளது. இந்திய வரலாற்று ஆவண விற்பனையிலேயே மிக அதிக தொகைக்கு ஏலம் போன ஆவணமாக இது புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. காந்தி தனது நெருங்கிய கூட்டாளியும் சுதந்திர போராட்ட வீரருமான ஆனந்த் டி. ஹிங்கோராணியின் மனைவி வித்யா மறைந்தபோது, அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் கடந்த ஆகஸ்ட் 21, 2026-க்கு முந்தைய ஆண்டுகளில் எழுதிய 688 கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பே இந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

உண்மை, அகிம்சை, பிரம்மச்சரியம், தீண்டாமை ஒழிப்பு மற்றும் சுயராஜ்யம் போன்ற காந்தியின் ஆழமான சிந்தனைகளை உள்ளடக்கிய இந்தக் கடிதங்கள், ஹிங்கோராணி குடும்பத்தினரால் பல தலைமுறைகளாகப் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வந்தவை ஆகும். அதுமட்டுமில்லாமல் அவருடன் தொடர்புடைய பல்வேறு தனிப்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய 86 தொகுப்புகளும் ஏலம் விடப்பட்டன. இதில் குறிப்பாக, கடவுள் மற்றும் பகவத் கீதை குறித்த காந்தியின் கருத்துக்களைக் கொண்ட ‘மெசேஜ் ஆன் காட்’ என்ற தொகுப்பு ரூ.1.68 கோடிக்கும், காந்தியின் ‘பெட்டி ராட்டை’ மற்றும் இரண்டு கடிதங்கள் அடங்கிய தொகுப்பு ரூ.1.02 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது. மேலும், காந்தி எழுதிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டு, அவரது கையொப்பமிடப்பட்ட புகழ்பெற்ற புகைப்படம் ரூ.78 லட்சத்திற்கும், அவரது பொருளாதார சுதந்திரம் குறித்த கடிதங்கள் மற்றும் அஞ்சல் அட்டைகளின் தொகுப்பு ரூ.57.60 லட்சத்திற்கும் ஏலம் போயுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in