LATEST NEWS
இவருக்கா இப்படி?…. அந்த இடத்தில் தீராத வலியால் அவதிப்படும் நவரச நாயகன் கார்த்திக்…. பிராத்தனை செய்யும் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் கார்த்திக். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த முதல் படமே வெற்றி கொடுத்ததால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இந்த படத்தை தொடர்ந்து மௌன ராகம், ஆகாய கங்கை, லக்கி மேன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பின்னர் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சினிமாவிலிருந்து சற்று விலகி இருந்த இவருக்கு,கடந்த 2015 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் திரைப்படத்தில் வில்லனாக மாஸ் என்ட்ரி கொடுத்தார். இந்த நிலையில் அவரின் மகன் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் இருவருக்கும் அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது.
இதனிடையே 60 வயதை எட்டியுள்ள கார்த்தி கடந்த வருடம் கீழே தடுக்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தற்போது கீழே விழுந்த சமயத்தில் அதே காலில் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு தற்போது அவரின் கால் எலும்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை அவர் செய்யாமல் அதே வழியில் அவதிப்பட்டு வருகின்றார். இதனால் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.