LATEST NEWS
பிக்பாஸ் சாண்டி மாஸ்டர் மகளா இது?…. ஆள் அடையாளம் தெரியாம இப்படி வளர்ந்துட்டாங்களே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குனராக வலம் வருபவர் தான் சாண்டி. இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் நடன இயக்குனராக மட்டுமல்லாமல் 3:33 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்.
இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் முதலில் நடிகை காஜல் பசுபதியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அதன் பிறகு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். பின்னர் சாண்டி மாஸ்டர் கடந்த 2017 ஆம் ஆண்டு Dorathy Sylviaஎன்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன.
அவரின் மூத்த மகள் லாலாவை ரசிகர்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்நிலையில் குழந்தையாக பார்த்த லாலா தற்போது நன்றாக வளர்ந்துள்ளார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை சாண்டி பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.