LATEST NEWS
அடடே நடிகர் விக்ராந்தின் அம்மா இவங்கதானா?…. இவங்களும் பிரபல நடிகை தான்…. புகைப்படம் (உள்ளே)….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய்.இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. திரை பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர் தான் விஜய். இவருடைய சித்தி மகன் தான் நடிகர் விக்ராந்த்.
தமிழில் வெளிவந்த முத்துக்கு முத்தாக,கோரிப்பாளையம் மற்றும் கவண் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.இவர் பிரபல சீரியல் நடிகை மானசாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளன.
இவரின் மனைவி சின்னத்திரை நடிகை என்பதை பலரும் அறிந்திருப்போம். ஆனால் விக்ராந்தின் தாயும் ஒரு நடிகை தான். விக்ராந்தின் தாய் ஷீலா சின்னத்திரையில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது அவரின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.