CINEMA
நானும் என் குழந்தைகளும் தவித்துக் கொண்டிருக்கிறோம்…. ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி உருக்கம்…!!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சைரன். இந்த படம் சரியான வரவேற்பு பெறவில்லை. அதனை எடுத்து அவரிடம் சூப்பர் டூப்பர் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவகாரத்தை செய்வதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அதிலிருந்து விவாகரத்துக்கான காரணம் குறித்து பலரும் தங்களுடைய விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தன்னுடைய இன்ஸ்டா பதிவில், இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும் என்னுடைய ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி விவாகரத்து முடிவை அறிவித்துள்ளார். அவரிடம் பலமுறை பேச முயற்சித்தேன். ஆனால் வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் நானும் என் குழந்தைகளும் தவித்துக் கொண்டிருக்கிறோம் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.