LATEST NEWS
பொன்மகள் வந்தால் செகண்ட் லுக் -இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை ஜோதிகா.இவர் நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.இவரின் முகம் பலரும் அறிந்ததே. நடிகர் சூர்யாவுடன் திருமணதிற்கு பின் தியா, தேவ் என குழந்தைகளுக்கு அம்மா ஆனாலும் இன்னும் அதே துள்ளல் உடனும் படங்களில் நடித்து வருகிறார்.
36 வயதினிலே, மகளிர் மட்டும் படங்களில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த அவர் அதன் பின் நாச்சியார் எனும் படத்தில் பெண் போலீஸ் வேடத்தில் மிரட்டினார். காற்றின் மொழி படத்தில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த நடிப்பு அவர் ராட்ச்சசி படத்தில் ஒரு அதிரடியான கண்டிப்பான டீச்சராகவும்,நடிகர் கார்த்தி உடன் தம்பி படத்தில் கண்டிப்பான அக்காவாகவும் திறமை காட்டினார்.
தற்போது அறிமுக இயக்குனர் ப்ரட்ரிக் இயக்கி வரும் பொன்மகள் வந்தால் என்ற ஜோதிகா படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 2D எண்டர்டெயினர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, 96 பட புகழ் கோவிந்த் வசந்தா பாடல் வரிகளை எழுதி வருகிறார்.
ஏற்கனவே படத்தில் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று இரண்டாம் லுக்கை தயாரிப்பு நிறுவனம் மகளிர் தினத்தை சிறப்பிக்கும் விதமாக ஸ்பெஷல் வெளியிட்டுள்ளது.இந்த செகண்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
She is fierce and unstoppable… Here’s #PMV2ndLook for you! #HappyWomensDay2020#PonmagalVandhal#Jyotika #KBhagyaraj @rparthiepan #Thiagarajan #PratapPothen #Pandiarajan @Suriya_offl @rajsekarpandian @fredrickjj @govind_vasantha @Lyricist_Vivek @SakthiFilmFctry pic.twitter.com/QR93TBJVOS
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) March 8, 2020