LATEST NEWS
அப்படியே அப்பா மாதிரியே…. நடிகர் விஜய் மகன் இயக்கும் குறும்படம்…. இணையத்தை கலக்கும் வீடியோ இதோ….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து தளபதி 67 படப்பிடிப்பு தற்போது நடைபெற்ற வருகிறது. இரண்டாவது முறையாக விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இந்த படத்தில் அமைகின்றது. இந்தத் திரைப்படத்தில் திரிஷா, கௌதம் மேனன், அர்ஜுன் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இதனிடையே விஜய் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஜோசப் சஞ்சய் மற்றும் திவ்யா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளன. இதில் விஜயின் மகன் ஜோசன் சஞ்சய் அமெரிக்காவில் படம் இயக்கம் தொடர்பான படிப்பை படித்து வருகின்றார் . தன்னுடைய மகனுக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை எனவும் இயக்கத்தில் ஆர்வம் இருப்பதாகவும் நடிகர் விஜய் பலமுறை கூறியுள்ளார். இந்நிலையில் ஜோசன் சஞ்சய் குறும்படம் ஒன்றை இயக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
SAC – Director , #ThalapathyVijay – Actor , Now Sanjay – Director.
Director Jason Joseph Sanjay 💥 pic.twitter.com/D2zqz9xkHm
— Shankar (@Shankar018) January 27, 2023