CINEMA
“கங்குவா” படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு…? கவலையில் சூர்யா ரசிகர்கள்…!!

பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமான விஸ்வாசத்தை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா மொத்தம் ஏழு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கங்குவா’. 38 மொழிகளில், 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் “கங்குவா” படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்., 10இல் ‘கங்குவா’ வெளியாக இருந்த நிலையில், அதே நாளில் ரஜினியின் ‘வேட்டையன்’ படம் வெளியாவதால், இந்த படத்தை ஒத்திவைக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.