சன் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல்.

இந்த சீரியலில் முன்னணி நடிகைகளான கனிகாம், பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா மற்றும் சத்யபிரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அதனைப் போலவே மாரிமுத்து மற்றும் பாம்பே ஞானம் போன்ற நடிகர்களும் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆணாதிக்கம் மற்றும் பெண்ணுரிமை போன்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் நடித்து வரும் கனிகா சில நாட்களுக்கு முன்பு காலில் அடிபட்டை இப்போது உடல் நலம் சரியாகி வருவதாக பதிவிட்டிருந்தார்.

தற்போது கணவருடன் எடுத்த கலக்கல் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

அதாவது அவரின் கணவர் ஷ்யாமிற்கு பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கணவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.