அனல் பறக்கும் காவேரி விவகாரம்…! கர்நாடக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்ட கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அனல் பறக்கும் காவேரி விவகாரம்…! கர்நாடக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்ட கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்…!

Published

on

கன்னட நடிகரான சிவராஜ்குமார் 1962ம் ஆண்டு மெட்ராஸில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையிலேயே தனது பட்டப் படிப்பை முடித்த அவர், எம்ஜிஆர் அரசு கல்லூரியில் நடிப்பு பயிற்சி மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் என்பதும், அண்மையில் காலமான முன்னணி கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் அண்ணனும் ஆவார். கடந்த 1974ம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீனிவாச கல்யாணம் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிவராஜ்குமார் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக கன்னட உலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார்.

அவர் தமிழில் நேரடியாக நடித்து வெளியான முதல் திரைப்படம் ஜெயிலர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தபடியாக தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிவராஜ் குமார் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கர்நாடக விவசாயிகளுக்கு ஆதரவாக கன்னட நடிகர்கள் பலரும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு தினசரி 5000 கன அடி நீரை திறக்க வேண்டும் என காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில்  பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

தற்பொழுது கர்நாடக விவசாயிகளுக்கு ஆதரவாக பல முன்னணி  நடிகர்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவராஜ்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கர்நாடகத்தில் மழை குறைவால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த விவகாரத்தை கருத்தில் கொண்டு இரு மாநிலமும், நீதிமன்றமும் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.  இதேபோல் கன்னட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் காவேரி விஷயத்தில் விவசாயிகளை பாதிக்காத வண்ணம் முடிவுகளை எடுக்க வேண்டும் என சோசியல் மீடியாவில் பதிவு செய்து வருகின்றனர். இதோ இதுதொடர்பான வீடியோ….

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in