CINEMA
பட ரிலீசுக்காக இப்படியா..? லட்டு விவகாரத்தில் மன்னிப்புக் கேட்டு வாங்கி கட்டிக் கொள்ளும் நடிகர் கார்த்தி…!!

மெய்ய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் திருப்பதி லட்டு பற்றிய ஆங்கரின் கேள்விக்கு, “லட்டு இப்போதைக்கு சென்சிட்டிவான டாப்பிக்” என்று நடிகர் கார்த்தி மேடையில் சிரித்தபடி பதிலளித்திருந்தார். இதற்கு பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்தார். அதன்பின்னர் நேற்று நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரினார்.
இதைத் தொடர்ந்து, அவரை எக்ஸ் பக்கத்தில் திரைப்பட ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர். மெய்யழகன் படத்தின் ஆந்திரா ரிலீசுக்காக இப்படி போய் மன்னிப்புக் கேட்கலாமா? என ரசிகர்கள் திட்டித் தீர்க்கின்றனர். மேலும் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மியும் இதே கருத்தை முன் வைத்துள்ளார்.