LATEST NEWS
என்னது….! கீர்த்தி சுரேஷ் போட்டிருந்த பேக் விலை இத்தனை லட்சமா?…. விலையை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்….!!!!

மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். கடந்த 2000 ஆண்டு வெளியான பைலட்ஸ் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கீதாஞ்சலி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். முதலில் மலையாளத்தில் நடித்து வந்த இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இது என்ன மாயம் என்ற திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமான இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.
அதன்பிறகு தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. சமீபத்தில் இவர் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு உடன் இணைந்து சர்க்கார் வாரி பாட்டா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று இருந்தது. தற்போது உதயநிதி ஸ்டாலின் உடன் மாமன்னர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் விமான நிலையத்திற்கு வந்த கீர்த்தி சுரேஷை பத்திரிகையாளர்கள் பலரும் புகைப்படம் எடுத்தனர். அந்த புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் பேக்கை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகினர். நடிகை கீர்த்தி சுரேஷ் வைத்திருந்த அந்த பேக் இந்திய மதிப்பில் 4 லட்சம் ரூபாய் வரக்கூடிய ஒரு பேக். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த பேக் தொடர்பான தகவலை தேட முயற்சி செய்தபோது அந்த பேக் விலை 31,500 டாலர் என்பது தெரிய வந்தது. அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். மேலும், அந்த பேக் உடன் சேர்த்து ஸ்ட்ராப் மொத்தம் 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என்பது அந்த பேக்கின் விலை. இதை பார்த்த ரசிகர்கள் செம ஷாக்காகி உள்ளனர்.