CINEMA
“செவ்வானம் சேலைக்கட்டி” நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்…!!

நடிகை மாளவிகா மோகனன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரஜினியின் பேட்ட படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். மாஸ்டர் படமும் ஹிட்டானதால் பாலிவுட்டில் நட்சத்திர நாயகியாக வலம் வந்தார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் டிவிட்டர் பக்கத்தில் சிவப்பு நிற சேலையில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ள இவர் தமிழ் சொந்தங்களுக்கு என் இனிய வணக்கம்…. அன்புடன் உங்கள் மாளவிகா என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் சொந்தங்களுக்கு என் இனிய வணக்கம் ☺️
அன்புடன் உங்கள் மாளவிகா ♥️
Chennaiii- you always give sooo much love #thangalaan ❤️ pic.twitter.com/JC1AYy36fZ
— Malavika Mohanan (@MalavikaM_) August 10, 2024